எந்நாளுமே துதிப்பாய் | Ennalume thuthipai Lyrics | Tamil Christian Songs Lyrics

By Lyrics Rise

Published On:

Join WhatsApp

Join Now

எந்நாளுமே துதிப்பாய் தமிழ் லிரிக்ஸ் – Ennalume thuthipai Song Lyrics | Jesus Song Tamil | Tamil Christian Songs

Ennalume thuthipai Lyrics | எந்நாளுமே துதிப்பாய் | Ennalume thuthipai Lyrics In Tamil and English 

Ennalume thuthipai Lyrics in Tamil

எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது….. எந்நாளுமே

பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி….. எந்நாளுமே

எத்தனையோ கிருபை, – உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
நேயமதாக ஜீவனை மீட்டதால்…… எந்நாளுமே

நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்….. எந்நாளுமே

பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது….. எந்நாளுமே

மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே….. எந்நாளுமே

தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே….. எந்நாளுமே

More Tami Christian Songs Lyrics

Ennalume thuthipai Lyrics in English

Ennaalu maethuthippaaI – Ennaaththumaavae, nee
Ennaalumae thuthippaay!
Innaal varaiyilae unnathanaar seytha
Ennnnillaa nanmaikal yaavu maravaaDhu.

paavangal eththanaiyo, – ninaiyaa thirundhaarun
paavangal eththanaiyo?
paazaana Nnoyai agatti kunamaakkip
paarinil vaiththa makaa dhaya vaiennnni

eththanaiyo kirupai, – unnuyirkku seiythaarae
eththanaiyo kirupai
niththamunaimuti soottinathumanti,
naeyamadhaaka jeevanai meettadhaal.

nanmaiyaalun vaayai-niraiththaarae, poorththiyaai
nanmaiyaalun vaayai
unvayathu kalukaippol palangaondu,
ongu ilamaipolaakavae seiythadhaal.

Boomikkum vaanaththukkum ulla dhooram polavae,
Boomikkum vaanaththukkum;
saami payamullavar mael avar arul
saalavum thangumae, saththiyamaeyithu.

mannippu maatchimaiyaam- maathaevan arulum
mannippu maatchimaiyaam;
ennnnoovaayo kilakku maerkin dhooramae?
ennnnil unpaavam akantathaththooramae.

thandhaithan pillaikadku – thayavoduirangaano
thanthaithan pillaikadku
entha vaelaiyumava rodu thanginaal,
aettip paaraattiyae thookkich sumapparae.

Ennalume thuthipai Song Youtube Video

Ennalume thuthipai | Ennalume thuthipai Lyrics In Tamil | Ennalume thuthipai Lyrics In English | Jesus Song Tamil

 

Lyrics Rise

Lyrics Rise is your go-to platform for the latest and most accurate song lyrics. We provide lyrics across multiple languages and genres, ensuring an easy and enjoyable experience for music lovers.

Leave a Comment